தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி பலரும் நடிகர்,தொகுப்பாளர்,இயக்குனர் என பல துறைகளில் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய நட்சத்திரங்களாக வளர்த்துள்ளனர்.சிலர் சின்னத்திரையிலும்,சில வெள்ளித்திரையில் தங்கள் திறமையை நிரூபித்து அசத்தி வருகின்றனர்.

சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் சத்யா தேவராஜன்.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் நடன வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.

இவரது ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவையாக இருந்து வந்தன.தொகுப்பாளினியாக அசத்திய சத்யா தேவராஜன் சன் டிவியில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கிய அருவி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.அடுத்ததாக சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள எதிர்நீச்சல் தொடரிலும் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது சத்யா தேவராஜனுக்கு ஆனந்த் என்பவருக்கும் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.