சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இந்தப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார்.

Anbin Vazhi Lyrical Video Song From Nenjamundu Nermaiyundu Odu Raja

இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார் கார்த்திக் வேணுகோபாலன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக முடிந்தது. சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் U சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் கடந்த 3-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Anbin Vazhi Lyrical Video Song From Nenjamundu Nermaiyundu Odu Raja

தற்போது இந்த படத்தின் அன்பின் வழி லிரிக் வீடியோ வெளியாகி ஈர்த்து வருகிறது. இந்த பாடலை சரண்யா, சஹானா மற்றும் ஐஸ்வர்யா பாடியுள்ளனர்.