தீரன் அதிகாரம் ஒன்று ,கடைக்குட்டி சிங்கம் பட வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் படம் தேவ்.அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் நடிக்கிறார்.பிரகாஷ்ராஜ் , ரம்யா கிருஷ்ணன் போன்ற சீனியர் நடிகர்களோடு ஆர் ஜே விக்னேஷ்காந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவில் , ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசையில் உருவாகியுள்ளது.இந்த படம் காதலர் தினத்தன்று வெளிவரும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அடுத்த வாரம் படம் திரைக்கு வர உள்ள நிலையில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத்தின் துள்ளலான நடனத்தில் கலர்புல்லாக உருவாகியுள்ள அணங்கே வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீடாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.