லீனா மணிமேகலை என்ற இண்டிபென்டென்ட் இயக்குனரிடம் சுசி கணேசன் பாலியல் ரீதியாக துன்புறுத்திய செய்தி இணையத்தில் மீ டு என்ற ஹாஷ்டாகில் சமீபத்தில் பரவி வருகிறது. 

Amala Paul Mentioned Susi Ganesan Name In Me Too Hashtag Supporting Leena Manimegalai

இதற்க்கு எதிராக சுசி கணேசன் தரப்பிலிருந்து முறைப்படி விளக்கமும், புகாரும் அளிக்கப்பட்டது. தற்போது அமலா பால் அவர்களும் சுசி கணேசனுக்கு எதிராக தனது ட்விட்டர் பதிவில் அவரது குணங்கள், அவர் எப்படிப்பட்டவர் என்று பதிவிட்டிருக்கிறார்.

சில நொடிகளிலேயே அமலா பால் தனது அடுத்த ட்விட்டர் பதிவில் இயக்குனர் சுசிகணேசனும், அவரது மனைவியும் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டினர் என பதிவு செய்தார். அதில் சுசிகணேசனின் மனைவி மஞ்சரி அவர்கள், அமலா பாலின் பேச்சை கேட்காமல் சிரித்து கொண்டிருந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார். பிரபலங்களின் பெயர் அடிபடும் இந்த மீ டு நிகழ்வு வைரலாக பரவி வருகிறது.