லைக்கா தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வெளியான 2.0 படத்தில் ரஜினிகாந்திற்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் அக்ஷ்ய குமார்.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் 10,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் வசூலில் முந்தைய சாதனைகளை முறியடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் அக்ஷய் குமார் ஏற்று நடித்த பாத்திரம் மறைந்த பறவையியல் மேதையான சலிம் அலியைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அக்ஷய குமாரின் மேக்கப் சாயலும் அவரை தழுவி இருந்தன. பிரம்மாண்டம் மட்டுமல்லாமல் கதைக்கு ஏற்ற ஆராய்ச்சி செய்த இயக்குனர் ஷங்கரின் இச்செயல் நிச்சயம் பாராட்டிற்குரியது.

Akshay Kumars Role In 2point0 Movie Was Inspired From Late Salim Ali The Birdman