உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் தல அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தற்போது இயக்குனர் ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி வரும் படத்தில் சியான் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். 

Akshara Haasans Tweet About Movie Logan Featuring Hugh Jackman As Wolverine

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அக்ஷரா தனது ட்விட்டரில் சோகமான ஒரு பதிவை பதிவிட்டார். "என் இதயம் உடைந்துவிட்டது. என் குழந்தை பருவம் முடிந்துவிட்டது என நம்பமுடியவில்லை" என அதில் கூறிப்பிட்டுளார்.

ஹியூ ஜேக்மன் நடிப்பில் ஹாலிவுட் படமான லோகன் படத்தை பார்த்துவிட்டு தான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார். அப்படத்தின் இறுதியில் உலகப்புகழ் பெற்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரமான வால்வரின் இறப்பது போல காட்டப்பட்டிருக்கும். அதற்கு தான் அக்ஷரா ஹாசன் இப்படி பதிவிட்டுள்ளார்.

Akshara Haasans Tweet About Movie Logan Featuring Hugh Jackman As Wolverine