தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் மிகவிரைவில் தொடங்கவுள்ளது.இதனை அடுத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK 62 படத்தில் நடிக்கவுள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அஜித் நடிக்கும் AK 61 படத்தின் ஷூட்டிங் சில தினங்களில் தொடங்கும் என்ற தகவல்கள் கிடைத்து வருகிறது.சில தினங்களுக்கு முன் கேரளாவில் இருப்பது போல சில புகைப்படங்கள் வெளியாகின,நேற்றும் கேரள கோவில் ஒன்றில் தரிசனம் செய்வது போல புகைப்படங்களும் வெளிவந்தன.

அஜித் கேரளாவில் உள்ள குருகிருபா வைத்தியசாலையில் சில நாட்கள் சிகிச்சை பெற்றும் வந்துள்ளார்,அங்கு தன்னை நன்றாக பார்த்துக்கொண்ட மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கைப்பட ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.இந்த கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.