மீண்டும் பைக்கில் World Tour..AK62 நிலை என்ன? – வைரலாகும் அஜித் குமாரின் மாஸ் புகைப்படங்கள் இதோ..

நேபாளத்தில் பைக் பயணம் மேற்கொண்ட அஜித் குமார் வைரல் புகைப்படம் இதோ - Ajith kumar started bike tour | Galatta

இந்தியாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரானவர் நடிகர் அஜித் குமார். பல பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கும் அஜித் குமார் அவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியான துணிவு திரைப்படம் உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து அஜித் குமார் அவரது 62 வது படமான AK62 திரைப்படம் லைகா தயாரிப்பில் யார் இயக்குவது என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

 

Today's pic of Ajith sir in Nepal.

Pic: Rajman | #Ak #Ajith #AjithKumar | #Thunivu | #AK62 | #RIDEformutualrespect | pic.twitter.com/wvAGufqEwq

— Ajith | Dark Devil (@ajithFC) April 18, 2023

இதனிடையே தடையற தாக்க, தடம் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அவர்கள் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது ஆனால் இதுவரை நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. இருந்தாலும் படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் அஜித் குமார். மீண்டும் அவரது இரு சக்கர வாகனத்தில் உலக சுற்றுலா திட்டத்தை கையிலெடுத்துள்ளார். இதுவரை இந்தியா முழுவதும் சுற்றுபயணம் மேற்கொண்ட அஜித், அடுத்ததாக நேபாளம் சென்றுள்ளார். தற்போது அவர் நேபாளம் போன்ற பகுதிகளில் பைக் ரைடு செய்து வருகிறார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்தின் இந்த உலக சுற்றுலா குறித்து சில மாதங்களுக்கு முன்னதாக அவரது மேனேஜர் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என பெயரில் அறிவித்திருந்தார். இந்த பயணம் AK62 பின்புதான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென் அஜித் பைக்குடன் நேபாளம் சென்றுள்ளதால் ரசிகர்கள் AK62 படம் குறித்து கேள்வியை எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் அஜித்தின் கனவு பயணமான இந்த பயணம் படிப்படியாக நிறைவேறி  வருவதாலும் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகும் வண்ணம் இருப்பதாலும் ரசிகர்கள் உற்சாகத்திலும் இருந்து வருகின்றனர்.

Ajith sir's Nepal bike tour pic.

| #Ak #Ajith #AjithKumar | #Thunivu | #AK62 | #RIDEformutualrespect | pic.twitter.com/gdPb7i6Ccz

— Ajith | Dark Devil (@ajithFC) April 17, 2023

முன்னதாக துணிவு படத்தின் போதும் இது போன்ற பயணம் அது சார்ந்த புகைப்படங்கள் வெளியாகின. இருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் துணிவு திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள AK 62 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இப்படத்தின் அறிவிப்பு வரும் மே1 ம் தேதி அஜித் குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக அதிகப்படியான வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப் படுகிறது.

RRR நாயகன் JrNTRன் அடுத்த பிரம்மாண்ட படைப்பில் கைகோர்த்த முன்னணி பாலிவுட் நடிகர்... NTR30 பட மாஸான அறிவிப்பு இதோ!
சினிமா

RRR நாயகன் JrNTRன் அடுத்த பிரம்மாண்ட படைப்பில் கைகோர்த்த முன்னணி பாலிவுட் நடிகர்... NTR30 பட மாஸான அறிவிப்பு இதோ!

மிட் நைட் பிரியாணி சாப்பிடுவோம்... ஹாரிஸ் ஜெயராஜ் உடனான வாழ்க்கை பயணத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்த சுமா ஹாரிஸ்! வைரல் வீடியோ
சினிமா

மிட் நைட் பிரியாணி சாப்பிடுவோம்... ஹாரிஸ் ஜெயராஜ் உடனான வாழ்க்கை பயணத்தின் சுவாரஸ்யங்களை பகிர்ந்த சுமா ஹாரிஸ்! வைரல் வீடியோ

மயக்கும் பொழுதே.. சாகுந்தலம் பட பாடலின் வீடியோ வெளியானது.. உற்சாகத்தில் சமந்தா ரசிகர்கள் - வீடியோ இதோ..
சினிமா

மயக்கும் பொழுதே.. சாகுந்தலம் பட பாடலின் வீடியோ வெளியானது.. உற்சாகத்தில் சமந்தா ரசிகர்கள் - வீடியோ இதோ..