ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அஜித்குமாரின் சிரிப்பு... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள் இதோ!

ட்ரெண்டாகும் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம்,ajith kumar latest photos from scotland goes viral on social media | Galatta

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட மாஸ் ஹீரோவாகவும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் முன்னதாக நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான நிலையில் ஹாட்ரிக் ஹிட்டடிக்கும் விதமாக வெளிவந்த துணிவு திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

அஜித் குமாருடன் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், விஸ்வநாத் உத்தப்பா, பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ள துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் பணியாற்றியுள்ள துணிவு படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சுப்ரீம் சுந்தர் பணியாற்றியுள்ளார். போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீசான துணிவு திரைப்படம் பக்கா அதிரடி ஆக்சன் படமாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. 

இதனை அடுத்து அஜித் குமாரின் திரைப்பயணத்தில் 62வது திரைப்படமாக தயாராகும், AK62 திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. நடிகர் அஜித்குமார் உடன் முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இணையும் AK62 திரைப்படத்திற்கு வேதாளம் மற்றும் விவேகம் ஆக்கிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து அனிருத் இசை அமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. மேலும் AK62 திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கும் அஜித்குமார் அவர்கள் தற்போது ஸ்காட்லாந்து சென்றுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பை கார்டனில் உயிரிழந்தவர்களுக்கு அஜித் குமார் தனது மரியாதையையும் அஞ்சலியும் செலுத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. மேலும் சிரித்த முகத்தோடு இருக்கும் அஜித் குமாரின் மற்றொரு புகைப்படமும் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் குமார் சிரித்தபடி இருக்கும் இந்த புகைப்படம் தற்போது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த புகைப்படம் இதோ…
 

Exclusive ✨🎉

Latest Pic Of AK sir at Scotland paying respect in Lockerbie Garden Of Remembrance. #AjithKumar #AK62 pic.twitter.com/Qxjofw37mB

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 11, 2023

AK #AjithKumar Smile Makes Us More Happiness.. 🥰

Love You Thala ♥#Thunivu || #AK62 pic.twitter.com/fpT1p9p0pR

— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) February 11, 2023

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பின் அடுத்த படத்தை அறிவித்த மித்ரன் R ஜவஹர்!- ஹீரோ யார் தெரியுமா? விவரம் உள்ளே
சினிமா

திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பின் அடுத்த படத்தை அறிவித்த மித்ரன் R ஜவஹர்!- ஹீரோ யார் தெரியுமா? விவரம் உள்ளே

மிர்ச்சி சிவாவின் அடுத்த என்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான டீசர் இதோ!
சினிமா

மிர்ச்சி சிவாவின் அடுத்த என்டெய்னராக வரும் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்... கலகலப்பான டீசர் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் பா ரஞ்சித் சந்திப்பு! காரணம் இதுதான்
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - இயக்குனர் பா ரஞ்சித் சந்திப்பு! காரணம் இதுதான்