சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் H.வினோத் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத் குமாருடன் இணைந்தார். தொடர்ந்து மீண்டும் அஜித் குமார் மற்றும் H.வினோத் கூட்டணியில் அடுத்ததாக வலிமை திரைப்படம்  உருவாகியுள்ளது.

அஜீத் குமாருடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மிரட்டாலன வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகிபாபு, மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள வலிமை திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூரின் பே பியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன.

அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியுள்ள வலிமை திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியான வலிமை GLIMPSE வீடியோ மற்றும் 2 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அஜித்குமாரின் வலிமை படத்தின் முதல் காட்சி குறித்த ருசிகர தகவலாக, சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கு உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், #Valimai 1AM என பதிவிட்டு, வலிமை ரிலீஸ் தினத்தில் அதிகாலை ஒரு மணிக்கு சிறப்பு முதல் காட்சியாக திரையிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.