தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான்  விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம்  படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து தமிழில் டிரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் தயாராகிவரும் புலி மட படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் இணைந்து தீயவர் குலைகள் நடுங்க மற்றும் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் ஆகிய படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் கதிர் உடன் இணைந்து புதிய வெப்சீரிஸில் நடித்துள்ளார்.

முன்னணி இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்து எழுதி இருக்கும் சூழல் - The Vortex வெப் சீரிஸை மகளிர் மட்டும் & குற்றம் கடிதல் படங்களின் இயக்குனர் பிரம்மா மற்றும் கிருமி பட இயக்குனர் அனுச்சரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ்-கதிர் உடன் இணைந்து இயக்குனர் பார்த்திபன் மற்றும் ஸ்ரியா ரெட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸாக தயாராகியிருக்கும் இந்த சுழல் வெப்சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் அமேசான் பிரைம் வீடியோ நடத்திய பிரம்மாண்ட நிகழ்ச்சியில் தற்போது சூழல் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…