தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா அடுத்ததாக மீண்டும் டெடி பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யா வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ள தி வில்லேஜ் வெப் சீரிஸில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.

தமிழில் அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸில் திவ்யா பிள்ளை கதாநாயகியாக நடிக்க, ஆலியா, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துக்குமார், கலை ராணி, ஜார்ஜ் M, ஜான் கொக்கின், அர்ஜுன் சிதம்பரம், பூஜா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ சக்தி தயாரிப்பில் உருவாகி இருக்கும் தி வில்லேஜ் வெப்சீரிஸின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை  இன்று ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற அமேசான் பிரைம் வீடியோவின் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யபட்டது. தி வில்லேஜ் வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…