சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் அடங்க மறு. இப்படத்தின் ட்ரைலர் சில நாட்கள் முன்பு வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது. இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.   

நடிகர் ஜெயம் ரவியின்  திரைவாழ்வில் முக்கிய மைல்-கல்லாக அமைந்த படம் தான் தனிஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகிய அப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. போலீஸ் கதா பாத்திரத்தில் வரும் ஜெயம் ரவியின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.     

இதைத்தொடர்ந்து அடங்க மறு படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். படத்தின் ட்ரைலர் தொகுப்புகளை அழகாக செதுக்கியிருக்கிறார் கார்த்திக் தங்கவேல். விக்ரம் வேதா படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் தான் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.   

தற்போது வெளிவந்திருக்கும் செய்தி என்னவென்றால் டிசம்பர் 14-ம் தேதி வெளிவரவிருந்த இப்படம் டிசம்பர் 21-தேதி வெளிவரவிருப்பதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறிவருகிறது. 

Adanga Maru Movie To Release On December 21 Starring Jayam Ravi And Raashi Khanna In Lead Music By Sam CS Directorial By Karthik Thangavel