முற்றிலும் மாறுபட்ட க்ரைம் திரில்லரில் களம் இறங்கிய சுனைனா..- ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான டிரைலர் இதோ..

சுனைனாவின் ரெஜினா படத்தின் டிரைலர் வெளியானது வீடியோ உள்ளே - Sunaina in regina movie trailer out now | Galatta

காதலில் விழுந்தேன், மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்திலே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை சுனைனா. தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர் காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். பின் தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கிராம கதை பின்னணியில் வெளியான வம்சம் படத்தில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  தொடர்ந்து தமிழில், அடுத்தடுத்து பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், காளி, தொண்டன், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். இடையே தமிழ் சினிமாவில் தற்காலிகாமாக படம் நடிக்காத சுனைனா கடந்த ஆண்டு வெளியான விஷாலின் லத்தி திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

தற்போது நடிகை சுனைனா தமிழில் கதாநாயகி மையப்படுத்தி உருவாகி இருக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘ரெஜினா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். YELLOW BEAR PRODUCTION LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ள இப்படத்தில் சுனைனா முதன்மை கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட அவதாரத்தில் நடிக்க இவருடன் இணைந்து நிவாஸ் ஆதித்யன், ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லத்துரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் டோபி ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு தயாரிப்பாளர் சதீஷ் நாயர் பாடல்களுக்கு இசையமைத்து படத்தின் பின்னனி இசையிலும் பணியாற்றியுள்ளார்.  விரைவில் ரெஜினா திரைப்பாம்ம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாக வுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுனைனா திரைபயணத்தில் இதுவரை இல்லாத கதையம்சத்தில் நடித்துள்ள ரெஜினா படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பை அதிகரிக்க செய்தது. தற்போது ரெஜினா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. க்ரைம் திரில்லர் திரைகதையில் சுனைனா கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ரெஜினா படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்களின் மனதை கவர்ந்து வைரலாகி வருகிறது.

 

“என் அம்மா..‌என் உணர்வு..‌ என் வாழ்க்கை..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..
சினிமா

“என் அம்மா..‌என் உணர்வு..‌ என் வாழ்க்கை..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஈரோடு மகேஷ் – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ..

‘வீரன்’ கெட்டப்பில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி.. அரங்கம் அதிர ஆர்பரித்த குழந்தைகள்  – விவரம் உள்ளே..
சினிமா

‘வீரன்’ கெட்டப்பில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த ஹிப்ஹாப் ஆதி.. அரங்கம் அதிர ஆர்பரித்த குழந்தைகள் – விவரம் உள்ளே..

“எனக்கு காரில் உட்காரவே பயமா இருக்கு..” கார் விபத்து குறித்து மனமுடைந்து பேசிய யூடியூபர் இர்ஃபான் – வீடியோ உள்ளே..
சினிமா

“எனக்கு காரில் உட்காரவே பயமா இருக்கு..” கார் விபத்து குறித்து மனமுடைந்து பேசிய யூடியூபர் இர்ஃபான் – வீடியோ உள்ளே..