ரசிகர்களின் மனதை கவர்ந்து மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியாக விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரபாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி ‘குக்கு வித் கோமாளி’. கலகலப்பான காமெடியுடன் அசத்தல் சமையல் போட்டிகளும் இடம் பெற்றதால் கடந்த 3 சீசன்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள குக்கு வித் கோமாளி 4 வது சீசன் அதே கலகலப்புடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் கோமாளி சிவாங்கி, கலை இயக்குனர் கிரண், நடிகர் மைம் கோபி, விசித்தரா, ஆண்ட்ரியன், ஸ்ருஷ்டி ஆகியோர் தற்போது போட்டியாளராக விளையாடி வருகின்றனர். இந்த வாரம் எபிசோடும் கலகலப்பாக ஒளிப்பரப்பாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் டாப் 5 போட்டியாளர்களில் சிவாங்கி நுழைந்துள்ளார்.
இதில் இந்த வாரம் போட்டியின் சவாலாக 1970 கள் முதல் 2020 வரையிலான முக்கிய கதாபாத்திரங்களின் வேடங்களில் கோமாளிகள் கலந்து கொண்டனர். இதில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘கில்லி’ திரைப்படத்தில் தளபதி விஜயின் வேலு கதாபாத்திரமாக பிரபல கோமாளி புகழ் வருகை தந்தார். அவரது பங்களிப்பு இந்த வார எபிசோடுக்கு பக்க பலமாக இருந்து வரவேற்பை பெற்றது.
பின் குக்கு வித் கோமாளி புகழ் கில்லி வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அதனுடன், 'அனைத்து தளபதி ரசிகர் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன், யாரும் தவறாக நினைக்க வேண்டாம், அனைத்தும் கற்பனையே..' என்று விஜய் ரசிகர்களிடம் சாமர்த்தியமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் தளபதி ரசிகர்கள் மகிழ்ந்த படி தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது புகழ் அவர்களின் புகைப்படம் இணையத்தில் 3 லட்சத்திற்கு மேல் லைக்குகளை குவித்து வருகிறது.
பிரபல கோமாளியான புகழ் சமீபத்தில் திரைப்படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு வெளியான ‘ஆகஸ்ட் 16, 1947’ மற்றும் ‘அயோத்தி’ ஆகிய திரைப்படங்களில் புகழ் கதாபாத்திரம் மிகபெரிய வரவேற்பை பெற்று வாழ்த்துகளை குவித்தது. மேலும் புகழ் தற்போது ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.