தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவான லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

தமிழில் சில படங்கள் நேரடியாக OTT-யில் வெளியானதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதிஹாசன் எப்போதும் ரசிகர்களுடன் கலந்துரையாடி தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது தனது ஆண் நண்பருடன் இணைந்து ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.இவர் தான் ஸ்ருதிஹாசனின் காதலன் என்றும் சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில் இந்த வீடீயோவை அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடம் மேலும் இந்த செய்தியை உறுதி செய்வதுபோல உள்ளது.வைரலாகி வரும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்