தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வி ஹவுஸ் ப்ரொடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனைத்தொடர்ந்து தயாராகிறது சிலம்பரசனின் பத்து தல.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படத்தை ஒபெலி.N.கிருஷ்ணா இயக்குகிறார். கன்னட சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில், அன்டர் வேர்ல்ட் டான்-ஆக  சிலம்பரசனும் காவல்துறை அதிகாரியாக கௌதம் கார்த்திக்கும் நடிக்க, நடிகை பிரியா பவானி சங்கர்,கலையரசன் மற்றும் அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை நடிகர் கௌதம் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.  தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பத்து தல படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.