தெலுங்கில் அகில் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சயீஷா.இதனை தொடர்ந்து ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடித்த ஷிவாய் படத்தில் நடித்திருந்தார்.பின்னர் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் சயீஷா.இதனை தொடர்ந்து ஜூங்கா,கடைக்குட்டி சிங்கம்,காப்பான்,கஜினிகாந்த் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த சயீஷா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

சயீஷாவிற்கு ஆர்யா மீது காதால் மலர,ஆர்யா-சயீஷா இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இதனை தொடர்ந்து இவர்கள் இணைந்து டெடி படத்தில் நடித்துள்ளனர்.சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

டான்சில் மிகவும் ஆர்வம் கொண்டவர் சயீஷா,தனது நடனத்திற்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் சயீஷா.சில மாதங்களுக்கு முன்0 தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட டான்ஸ் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.கொஞ்சம் உடலெடை கூடியது போல் சயீஷா இருந்ததார்.
அதனை வைத்து அவர் கர்பமாக இருக்கிறார் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இது வெறும் வதந்தி தான் என்று சயீஷா தரப்பு தெளிவுபடுத்தினார்.

இந்த செய்தியை தூள் தூளாக்கும் வண்ணம் சயீஷா சில மாதங்களுக்கு முன் தனது நடன வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது தனது புதிய நடன வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் சயிஷா,இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்