கடந்த வருடத்தின் இன்டர்நெட் சென்சேஷன் ஒரு அடார் லவ் திரைப்படத்தின் நாயகி பிரியா வாரியர்.இந்த படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இவரது கண்ணசைவிற்கும் , ஃபிளையிங் கிஸ்ஸிக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் அடிமையாகிவிட்டனர்.

உமர் லுலு இயக்கத்தில் ஷான் ரஹ்மான் இசையில் உருவான இந்த படத்தில் ரோஷன் பிரியா வாரியருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.பிரியா வாரியருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தை தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்தது.

வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி தாணு தமிழ்நாட்டில் இந்த படத்தை வெளியிடுகிறார்.பள்ளியில் நடக்கும் காதல் கதை என்பதால் இந்த படத்தை காதலர் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய காட்சியை ரசிகர்களுக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.அந்த காட்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து இந்த படம் தமிழில் நல்ல வசூலை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.