பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், காஜல் அகர்வால் மற்றும் மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு படம் `கவச்சம்'. விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

Actress Kajal Agarwal Gets The Unexpected Kiss From The Cinematographer Fans Raised Against Him   

இதில் பெலம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மெஹ்ரின் பிர்ஸாடா, காஜல் அகர்வால், இயக்குனர் ஸ்ரீனிவாச மமிலா, இசை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, இந்த படத்தின் படபிடிப்பின் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து காஜல் அகர்வால் கூறினார். அப்போது ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு பற்றியும் காஜல் பேசினார். அப்போது சோட்டா நாயுடு, காஜல் அகர்வாலை அணைத்து முத்தமொன்று கொடுத்தார். 

இதை தொடர்ந்து ட்விட்டரில் காஜல் அகர்வால் ரசிகர்கள் #BanChotaKNaidu என்ற ஹாஷ்ஸ்டேகை உருவாக்கி சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகம் அல்லாது தென்னந்திய சினிமாவில் பெரிதும் வலம் வருபவர் காஜல். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உருவாக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி தற்போது சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.