2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா.

Actress Jyothika Reveals About Her Continuous Projects Working With New Directors

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா.

Actress Jyothika Reveals About Her Continuous Projects Working With New Directors

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் நடிகை ஜோதிகாவும் கலந்து கொண்டார். மேடையில் பேசியவர், புதுமுக இயக்குனர்களை பாராட்டி புகழ்ந்தார். பின்பு தொடர்ச்சியாக மூன்று புதிய இயக்குனர்களுடன் தான் பணிபுரிவதாக பேசியுள்ளார்.