விஷ்ணு விஷால் பட ப்ரோமோவில் தல தளபதி ரெஃபரன்ஸ் !
By Sakthi Priyan | Galatta | December 18, 2018 13:00 PM IST
இயக்குனர் செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், சிங்கமுத்து, கருணாகரன், ரெஜினா கஸாண்ட்ரா, சாய் ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
ராட்சசன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் ப்ரோமோவை வெளியிட்டார் நடிகர் விஷ்ணு விஷால். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், விஸ்வாசம் மற்றும் மெர்சல் படத்தின் பேனர்களில் விஷ்ணு விஷால் இருப்பது போல உள்ளது.
My fav part in the movie :):) promo of #SilukkuvarpattiSingam - Moviebuff Promo 01 | Vishnuu Vishal, Regina Cas... https://t.co/fYJnxlgwIZ via @YouTube
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) December 18, 2018
இதனால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது வரிசையாக தொடர்ந்து சிறப்பான படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷ்ணுவிஷாலுக்கு இப்படமும் வெற்றிகரமாய் அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.