இயக்குனர் செல்லா இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், சிங்கமுத்து, கருணாகரன், ரெஜினா கஸாண்ட்ரா, சாய் ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

ராட்சசன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஷ்ணு விஷால். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தின் ட்ரைலரை நடிகர் சூர்யா இன்று மாலை வெளியிடுகிறார். வரிசையாக தொடர்ந்து சிறப்பான படங்களில் கவனம் செலுத்தி வரும் விஷ்ணுவிஷாலுக்கு இப்படமும் வெற்றிகரமாய் அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.