தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான நடிகர் விஷால் நடிப்பில் வருகிற தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள திரைப்படம் எனிமி. நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் எனிமி படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கியுள்ளார்.

இதனையடுத்து அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்து வெளிவரவுள்ளது. சமீபத்தில் வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

அடுத்ததாக ராணா புரோடக்சன் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் விஷால் 32 படத்தை தொடங்கினார் விஷால். இப்படத்தில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் மற்றும் சுனைனா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இளைய திலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யும் விஷால் 32 படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியானது. காவல் துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள விஷால் 32 படத்தின் டைட்டில் “லத்தி சார்ஜ்" என இந்த டீசரில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியான அந்த டைட்டில் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.