எம்.எஸ். தோனிக்கு இரண்டாவது குழந்தை அடுத்த ஆண்டு பிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

2021 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றி பெற்று 4 வது முறையாக கோப்பையை வென்று அசத்தி உள்ளது. இதனால்,
கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி கோப்பை வென்ற பிறகு நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது, கேப்டன் தோனியை அவரது மனைவி சாக்‌ஷி தோனியும், மகள் ஜீவா தோனியும்
கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் மூவரும் ஒன்றாக கட்டியணைத்த புகைப்படம் இணையத்தில் தற்போது தீயைகா பரவி
வருகிறது.

இந்த நிலையில் தான், அவர்களின் செயலுக்கு பின்னால் மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியும் இருப்பது வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கிறது. 

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது தோனியின் ரசிகர்கள் வேறு ஒன்றிற்காகவும் தோனியை வாழ்த்தி வருகின்றனர். 

அதாவது சாக்‌ஷி தோனி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் ஜீனியர் தோனியை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தோனிக்கு ஏற்கனவே ஸிவா என்ற மகள் இருக்கும் நிலையில் தோனியின் மனைவி சாக்‌ஷி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டு அவர்களுக்கு
இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதாகவும் ரசிகர்கள் இதற்காக தோனியை வாழ்த்தி வருகின்றனர்.

இதனால், உலகம் முழுவதும் உள்ள தோனியின் ரசிகர்கள் இணையத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக, தோனி - சாக்‌ஷி தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதை, தோனியின் நண்பரும், சக வீரருமான சுரேஷ் ரெய்னாவின் மனைவி
பிரியங்காவும் தற்போது சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனினும், இது உண்மையா, இல்லையா என்பது பற்றி இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அவரது ரசிகர்கள், தோனி -
சாக்‌ஷி தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.