விஷால் நடிப்பில் தயாராகிவரும் அயோக்யா திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது .இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்த அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இந்த படத்தை இயக்குகிறார்.

இமைக்கா நொடிகள் , அடங்க மறு படங்களில் நடித்த ராஷி கண்ணா இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இளம் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படம் தெலுங்கில் ரிலீசாகி சக்கை போடு போட்ட டெம்பர் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் ,கே எஸ் ரவிக்குமார் , சுமன்,வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது இருந்தே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.விஷால் பீர் பாட்டிலுடன் இருக்கும் போஸ்டருக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார் .

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .