அடுத்த படம் பற்றி விஜய்சேதுபதி வெளிப்படை ! என்னா ஸ்பீடு..
By Aravind Selvam | Galatta | February 05, 2019 12:04 PM IST
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி . அப்படி அவர் இன்னும் ஒரு சில படங்கள் திரைக்கு வர உள்ளன குறிப்பாக சூப்பர் டிலக்ஸ் , மாமனிதன் , சிந்துபாத் போன்ற முக்கியமான படங்களும் அதில் அடங்கும்.
கடந்த வருடம் விஜய்சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படமாக 96 அமைந்தது . 96 படத்தின் 100வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர் .
விழாவில் பேசிய விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரனின் உதவியாளரான டெல்லிப்ரசாத் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு 'துக்ளக்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் , 96 படத்தினை தமிழகத்தில் ரிலீஸ் செய்த 7 க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார் . இதனால் 'துக்ளக்' படத்தை பற்றிய அடுத்த கட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது