தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் FIR. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற FIR. படத்தையடுத்து விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் மோகன்தாஸ்.

முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ராட்சசன் படத்தை தொடர்ந்து மீண்டும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் மோகன்தாஸ் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக பாரம்பரியமான கட்டா குஸ்திச் சண்டையை மையப்படுத்தி விஷ்ணு விஷால் நடிக்கும்  கட்டா குஸ்தி புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் கட்டா குஸ்தி படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்.

வழக்கமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் தற்போது சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரேக் எடுத்துக்கொள்வது வாழ்க்கையில் மிக முக்கியமானது… சிறிது காலத்திற்கு சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன் விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.