தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகரான நடிகர் சிலம்பரசன்.TR  நடிப்பில் கடந்த ஆண்டின் இறுதியில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இதனையடுத்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் கொரோனா குமார் படத்திலும் சிலம்பரசன்.TR நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன்.TR நடித்து வருகிறார். 

இதனிடையே சிலம்பரசன்..T.R மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா.  நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக ETCETERA என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் தயாரித்துள்ள மஹா திரைப்படத்தை U.R.ஜமீல் எழுதி இயக்கியுள்ளார். மஹா படத்தில் நடிகர் சிலம்பரசன்.TR கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மஹா படத்திற்கு R.மதி ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் மஹா திரைப்படத்தின் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், வருகிற மே 27 ஆம் தேதி மஹா திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.