தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் வைபவ் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கோவா, ஈசன்,மங்காத்தா, டமால் டுமீல், மேயாத மான், பெட்ரோமேக்ஸ், ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் நடிகர் வைபவ் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்த மலேசியா அம்னீசியா திரைப்படம் கடந்த மே மாதம் ஜி5 OTT தளத்தில் வெளியானது. அடுத்ததாக இயக்குனர் பரி.கே.விஜய் இயக்கத்தில் தயாராகும் ஆலம்பனா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஆலம்பனா திரைப்படத்தில் நடிகை பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கலகலப்பான நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் ஆலம்பனா திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் முனீஸ்காந்த் ராமதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலம்பனா திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) ஜனவரியில் உலகெங்கும் திரையுலகில் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது ஆலம்பனா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அசத்தலான ஆலம்பனா திரைப்படத்தின் டீசர் இதோ…