விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார். 

Actor Surya To Do A Cameo In Madhavans Rocketry Movie Featuring Nambi Narayanans Real Life Story

அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டர் மட்டுமல்லாமல் தனது நடிப்பின் அளவை பட்டைதீட்டும் நடிகர் மாதவனின் இம்முயற்ச்சி பாராட்டிக்குரியதாகும்.

Actor Surya To Do A Cameo In Madhavans Rocketry Movie Featuring Nambi Narayanans Real Life Story

சமீபத்தில் நம்பி நாராயணன் ரோலுக்காக மாதவன் மேற்கொண்ட மேக்கப் மற்றும் உடல் அமைப்பு மாற்றம் குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் மாதவன். இறுதிச்சுற்று, விக்ரம் வேதா படங்களுக்கு பிறகு மாதவன் நடிப்பில் தயாராகும் இப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

Actor Surya To Do A Cameo In Madhavans Rocketry Movie Featuring Nambi Narayanans Real Life Story

தற்போது இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கிய காட்சியில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியது. ஹிந்தியில் வெளியாகும் version-ல் பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கான் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் கிடைத்துள்ளது. சிறந்த கதையம்சம் உள்ள படத்திற்கு கேமியோ பாத்திரம் இருப்பது கூடுதல் சுவாரஸ்யமே.

Actor Surya To Do A Cameo In Madhavans Rocketry Movie Featuring Nambi Narayanans Real Life Story