நெருப்பு டா பாடலின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் அருண்ராஜா காமராஜ். திரை துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்தவர் தற்போது இயக்குனராக களமிறங்கிய படம் கனா.

சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து திரையரங்குகளில் உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கனா. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண்கள் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

தற்போது இது குறித்து இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டரில், STR-கு நன்றி தெரிவித்துள்ளார். படத்தின் ஒவ்வொரு காட்சிகள் குறித்து மனதார வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் சிம்பு. இதன் மூலம் மகத்தான பாசிட்டிவிடி என்றும் கனா இயக்குனர் பதிவிட்டுள்ளார்.