"CARAVANக்கு உள்ளே போனதும் கண் கலங்கும்!"- காமெடியன்களின் போராட்டத்தை பகிர்ந்து கொண்ட சூரி... எமோஷனல் வீடியோ இதோ!

காமெடியன்களின் போராட்டத்தை பகிர்ந்து கொண்ட சூரியின் பேட்டி,actor soori shared about the journey of comedians | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் சூரி. தற்போது நகைச்சுவை நடிகர் என்ற அடையாளத்திலிருந்து மாறி தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் பேசிய நடிகர் சூரி விமர்சனங்களுக்கு எதிரான தன்னுடைய கோபம் ஏன் என்பதை விளக்கி சொன்ன போது, நகைச்சுவை நடிகர்களின் போராட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அந்த வகையில், 

“ஒரு காமெடியன் பின்னால் இருந்து பாருங்கள் அவன் எவ்வளவு மெனக்கெடுக்கிறான் என்று, முன்பு கூட ஒரு தடவை சொன்னேன் காமெடியனாக இருக்கும் போது நான் பயங்கர சீரியஸாக இருப்பேன் எதையாவது யோசித்துக் கொண்டே இருந்திருப்பேன். குமரேசனாக (விடுதலை படத்தில்) இருக்கும் போது தான் நான் மிகவும் ஜாலியாக இருந்தேன். எனக்கு எந்த கவலையும் கிடையாது எல்லா பொறுப்பும் இயக்குனரிடம் இருக்கிறது. ஆனால் காமெடியனாக இருக்கும் போது நாளைக்கு ஒரு சீன் இருக்கிறது என்றால், விஜய் சார் உடன் காம்பினேஷனில் ஒரு சீன் இருக்கிறது என்றால், அந்த காட்சியில் வேறு யார் யார் நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். என்ன என்ன கதாபாத்திரங்கள் இருக்கின்றன. சீன் என்ன இயக்குனர் சொல்லி இருப்பார். அதைப் பார்த்தால் ஓகே இது நன்றாக இருக்கிறது. இல்லை நாம் கூடுதலாக ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு முதன்மை காமெடியனாக என்னை படத்திற்குள் வைக்கிறீர்கள். எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறீர்கள். அதற்கான OUTPUT கொடுப்பதற்கு நான் இன்னும் கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். எனக்கு முன்னால் இருந்த காமெடியன்களை எல்லாம் நான் பார்க்கிறேன். நான் கேட்ட காசை கொடுக்கிறார்கள். விஜய் சார் அவர்களை திருப்தி படுத்த வேண்டும். எல்லாத்தையும் திருப்தி படுத்த வேண்டும். அப்போது நான் இரவு முழுவதும் யோசிக்க வேண்டும். காலை எழுந்திருக்கும் போது யோசிப்பேன். குளிக்கும்போது யோசிப்பேன். காரில் போகும்போது யோசித்துக் கொண்டே போவேன். அதற்கு முன்பே இயக்குனரை தனியாக கூப்பிட்டு, “அண்ணே அந்த இடத்தில் ஒரு சின்ன பன்ச் ஒன்று யோசித்து இருக்கிறேன். எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.” “ஓகே சூரி நன்றாக இருக்கிறது சூரி ஆனால் இதை அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்” அவர் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். “நன்றாக இருக்கிறது. அவரை இதைப் பேச சொல்லுங்கள். இதில் END நன்றாக இருக்கிறது. அடுத்த சீனுக்கு LEAD கொடுத்த மாதிரி இருக்கும்.” என எல்லாம் கேட்ட பிறகு, “ஓகே சூரி ஓகே சூரி... வேண்டாம் சூரி ஸ்கிரிப்ட் படி போய் விடுவோம்.” “ஓகே அண்ணே தேங்க்யூ அண்ணே…” என்றதும் நடித்து முடித்த பிறகு கேரவன் உள்ளே சென்ற பிறகு கண்கள் கலங்கும் என்னடா இது சில இடங்களில் காமெடி நடிகர்கள் மிகவும் விவாதித்து வற்புறுத்தி அவற்றை எடுக்க வைக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன் . ஆனால் நான் ஒரு நாள் கூட இதை பண்ணவே இல்லை. எனக்கு ஏனோ ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து பேசி பழக்கமே இல்லை. இதற்காக பின்னர் நான் வருந்துனியிருக்கிறேன். நீ ஒன்றும் சும்மா சண்டை போடவில்லை உன்னுடைய INPUTக்கு தான் நீ சண்டை போடுகிறாய். அப்படி இருக்கும்போது நீ சண்டை போட்டு இருக்கலாமே... உனக்கு நீ சம்பளம் வாங்குகிறாய் உன்னை நம்புகிறார்கள் இடங்களில் நம்பிக்கையோடு நீ சண்டை போட்டு ஏதாவது டைரக்டர்களிடம் பேசி இருக்கலாமே... நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ இயக்குனர் தவறாக நினைத்து விடு ஒருவேளை ஹீரோ தவறாக நினைத்து விடுவாரோ? ஓ அப்படி என்றால் சூரி சண்டை போடுகிறாரா? விவாதம் பண்ணுகிறாரா? அவர் பெரிய ஆளா? அப்படியெல்லாம் நினைத்து விடுவார்களோ கேமராவிற்கு வெளியே இவர்களெல்லாம் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ? சினிமாவில் என்னை தவறாக கொண்டு போய் விடக்கூடாது என நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறேன் இதையெல்லாம் நான் யாரிடமும் போய் சொல்ல முடியாது." என பேசிய சூரியின் அந்த முழு பேட்டி இதோ…
 

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ
சினிமா

நெருக்கமாக நடித்தால் தவறாக மதிப்பிடுகிறார்கள்!- INTIMACY காட்சிகள் பற்றி பொன்னியின் செல்வன் நாயகி சோபிதாவின் பளிச் பதில்! வைரல் வீடியோ

ஆர்யாவின் அடுத்த அதிரடி அவதாரமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... பக்கா ஆக்ஷனில் மாஸான டீசர் இதோ!
சினிமா

ஆர்யாவின் அடுத்த அதிரடி அவதாரமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... பக்கா ஆக்ஷனில் மாஸான டீசர் இதோ!

தமிழ் பேசாத போதும் பொன்னியின் செல்வனில் வானதியாக மணிரத்னம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சோபிதா துலிபலாவின் விளக்கம் இதோ!
சினிமா

தமிழ் பேசாத போதும் பொன்னியின் செல்வனில் வானதியாக மணிரத்னம் தேர்ந்தெடுக்க காரணம் என்ன? சோபிதா துலிபலாவின் விளக்கம் இதோ!