"நீங்க நடிக்க வேண்டாம் " முதல்நாள் படப்பிடிப்பில் சூரியிடம் வெற்றி மாறன்.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

முதல் நாள் படப்பிடிப்பு குறித்து நடிகர் சூரி பகிர்ந்தவை வைரல் வீடியோ இதோ - Actor soori about his first scene in viduthalai | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. மக்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான விடுதலை படத்தை உலகமெங்கும் ரசிகர்கள் பெருவாரியாக வரவேற்று வருகின்றனர். இந்நிலையில் படத்தின்  கதை நாயகனாக நடித்துள்ள நடிகர் சூரி அவர்கள் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு விடுதலை படத்தில் பணியாற்றியது குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதில்

அதில் அவரிடம், விடுதலை படத்தில் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து கேட்கையில் அவர்,

“முதல்நாள் நான் பெரிய தாடியோடு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விட்டேன்.  வெற்றி மாறன்‌ முன்ன சொன்ன இரண்டு படங்களுக்கும் தாடி வைக்க சொன்னார். இந்த படம் உறுதி செஞ்ச பின்னும் என்ன தாடி வைக்க சொன்னார். அன்னிக்கு நான் அவங்க ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் இது போலீஸ் படம் என்று. இதுல எதுக்கு நமக்கு தாடி என்று யோசித்தேன்‌. ஆவடியில் காவலர் பயிற்சி மைதானத்தில் வெற்றி மாறன் முன்னாடி தான் எனக்கு முடி வெட்ட சொன்னார். அங்கு கொஞ்சம் என்ன செதுக்க செதுக்க எனக்கு உள்ள நான் யோசிச்சிட்டு இருந்தேன். அவங்க பயன்படுத்தின கத்தரிக்கோல் சீப்புலாம் எனக்கு உளி மாதிரி தெரிந்தது. அப்பறம் பக்கா போலீஸ் ஆக்கிட்டாங்க... வெற்றிமாறன் குமரேசன் கதாபாத்திரமா நம்ம இருந்தோமா என்று யோசிச்சிட்டே அவர் முன்னாடி வந்து நின்னேன்.. அப்பறம் அவர் ஓகே என்று சொன்னார். ஆபத்தில் பொதுமக்களை எப்படி காவல்துறையினர் காப்பாத்துவார் என்று அங்கு சொன்னார்கள்.  என்னைவிட அதிக எடை கொண்ட ஆளை முதுகில் தூக்கி கொண்டுள்ளது ஓடுனேன். அத பார்த்த வெற்றி சார் அங்கு இருந்த உண்மையான ஹோம்கார்ட் போலிஸிலே ஒரு நடிகன் நீதான் நிஜ போலிஸ் மாதிரி இருக்கேன் னு சொன்னார். எனக்கு அது முதல் நாளே பயங்கரமான சந்தோஷம். எனக்கு பயம் இருந்துட்டே இருந்தது. இவர திருப்தி படுத்த நம்மளால முடியுமா? நம்மளால அவர் கஷ்டபடுவாரோ என்ற பயம் இருந்தது.

நான் கயிறு ஏறுவது போல் ஒரு காட்சி இருந்தது. அதில் நான் வழக்கமான சூரி போல் பாவனை செய்து ஏறினேன். பின் வெற்றி மாறன் கூப்டு நீங்க படத்துல நடிக்க வேண்டாம். எனக்கு அந்த வழக்கமான சூரி வேண்டாம். எனக்கு இந்த கதாபாத்திரத்திற்கு நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் பண்ணா மட்டும் போதும். நான் சொல்றத விட அதை உள்வாங்குனா போதும்..  அந்த ஒருநாள் தான் படபிடிப்பு செய்தார்கள் அதன்பின் கொரோனா திருப்பவும் இடைவெளி. பின்னர் 2 மாதம் கழித்து சத்யமங்கலம் காட்டில் படம் எடுத்தோம். முதல் நாள் பண்ணோம்.‌ அதுவும் சரியாக வரவில்லை... அதன்பின் அவர் சொல்றத அப்படியே பின் தொடர்ந்து நான் நடித்தேன்.” என்றார் நடிகர் சூரி.

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் சூரி நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு நேர்காணல் இதோ..

எனக்கு விஜய் சேதுபதி பெரிய ஸ்டார் னு தோனல..
சினிமா ஸ்பெஷல்ஸ்

எனக்கு விஜய் சேதுபதி பெரிய ஸ்டார் னு தோனல.." விடுதலை பட நடிகை பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரலாகும் வீடியோ இதோ..

 “அவர் பேராசிரியர் போல்..”  விடுதலை படம் பார்த்து விட்டு வெற்றிமாறன் குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன்.. – வைரலாகும் பதிவு இதோ.
சினிமா

“அவர் பேராசிரியர் போல்..” விடுதலை படம் பார்த்து விட்டு வெற்றிமாறன் குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன்.. – வைரலாகும் பதிவு இதோ.

வெளிநாட்டில் படமாகும் இந்தியன் 2 .. உலகநாயகன் கமல் ஹாசன் பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – வைரலாகி வரும் பதிவு இதோ....
சினிமா

வெளிநாட்டில் படமாகும் இந்தியன் 2 .. உலகநாயகன் கமல் ஹாசன் பகிர்ந்த அட்டகாசமான புகைப்படம்.. – வைரலாகி வரும் பதிவு இதோ....