ஆர்யாவின் அடுத்த அதிரடி அவதாரமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... பக்கா ஆக்ஷனில் மாஸான டீசர் இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டீசர் வெளியீடு,arya in katharbasha endra muthuramalingam movie official teaser | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்த டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இணைந்த ஆர்யா - இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்து ஆர்யா நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக பக்கா கமர்சியல் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் தயாராகியுள்ளது. தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தை இயக்குனர் M.முத்தையா உருவாக்கியுள்ளார். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் காதர் பாட்ஷா படத்திற்கு பாபா பாஸ்கர் ஷோபி, சாண்டி, ஜானி, சதீஷ் மற்றும் ஷெரிப் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.

முதல்முறையாக இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில், இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் M.முத்தையாவின் திரைப்படங்களில் வழக்கமாக அமைந்திருக்கும் அத்தனை ஃபேவரட் அம்சங்களும் நிறைந்திருக்கும் இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடிகர் ஆர்யா முற்றிலும் மாறுபட்ட புதிய அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார். 

இதனிடையே உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் 16வது IPL சீசன் இன்று (மார்ச் 31) பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா மாலை 5.30 மணி அளவில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசரை வெளியிட்டார். தொடர்ந்து தற்போது youtube இல் வெளிவந்துள்ள காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பக்கா அதிரடி ஆக்ஷனில் வெளிவந்திருக்கும் அந்த டீசர் இதோ…
 

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ
சினிமா

'த்ரிஷாவை இப்படி தான் கூப்பிடுவேன்!'- பொன்னியின் செல்வனில் பணியாற்றிய சுவாரஸ்யங்கள் பகிர்ந்த சோபிதா துலிபலா! வைரல் வீடியோ

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம்ம ட்ரீட்... லியோ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! விவரம் உள்ளே

'பொன்னியின் செல்வன்-2 2 தங்கலான்’- ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறிய சீயான் விக்ரம்… வைரலாகும் அட்டகாசமான புது GLIMPSE இதோ!
சினிமா

'பொன்னியின் செல்வன்-2 2 தங்கலான்’- ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறிய சீயான் விக்ரம்… வைரலாகும் அட்டகாசமான புது GLIMPSE இதோ!