வித்யாசமான திரில்லர் கதையில் மிரட்டும் பிரபு தேவா.! ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘WOLF’ பட டீசர்..

பிரபு தேவாவின் வுல்ப் பட டீசரை வெளியிட்ட படக்குழு வீடியோ உள்ளே - Prabhu deva upcoming wolf teaser out now | Galatta

இந்திய சினிமாவில் சிறந்த நடன இயக்குனராக புகழ் பெற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் பிரபு தேவா. நடன இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி பிரபலங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ் திரையுலகில் 90 களின் பிற்பகுதியில் முன்னணி நடிகராய் வலம் வந்த பிரபு தேவா இடையே இயக்குனராகவும் கவனம் ஈர்த்தார். தமிழில் இயக்குனராக ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘எங்கேயும் காதல்’ போன்ற திரைப்படங்கள் இயக்குனராக பிரபு தேவாவிற்கு வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கிலும் இயக்குனராக பாராட்டப் பட்டார்.

இடையே சில கால இடைவெளி விட்ட இவர் சமீப காலமாக தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இவரது நடிப்பில்  தேள், மை டியர் பூதம், பொய் கால் குதிரை,  பகீரா திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. அதை தொடர்ந்து தற்போது பிரபு தேவா பிளாஷ் பேக் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனிடையே பிரபு தேவா நடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வுல்ப்’ . தயாரிப்பாளர் சந்தேஷ் நாகராஜ் தயாரிப்பில் மிரட்டலான திரில்லர் கதைகளத்தில் உருவான இப்படத்தில் நாயகனாக பிரபு தேவா நடிக்க அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி ராய் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அஞ்சு குரியன், வசிஷ்டா என் சிம்ஹா, அனுசுயா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.

இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சன்ட் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார்..

600 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதையை மையமாக கொண்டு உருவான இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வித்யாசமான கதைகளத்தில் மாறுபட்ட ஹீரோவாக பிரபு தேவா நடித்து வெளியாகவுள்ள வுல்ப் பட டீசர் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ஹிப்னாடிசம், தெய்வ நம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான இப்படம் பிரபு தேவாவின் 60வது படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

 

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..
சினிமா

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..

 நான்கு தேசிய விருதுகளை வென்ற திரைப்பிரபலம் தற்கொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.! -  விவரம் உள்ளே..
சினிமா

நான்கு தேசிய விருதுகளை வென்ற திரைப்பிரபலம் தற்கொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.! - விவரம் உள்ளே..

ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களே Vibe - க்கு ரெடியா.! மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து வெளியான அட்டகாசமான அப்டேட்.. – விவரம் உள்ளே..
சினிமா

ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களே Vibe - க்கு ரெடியா.! மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து வெளியான அட்டகாசமான அப்டேட்.. – விவரம் உள்ளே..