எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகும் அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’.. – மிரள வைக்கும் அசத்தலான Glimpse – ஐ வெளியிட்ட படக்குழு..

அருள்நிதியின் டிமான்டி 2 படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு விவரம் உள்ளே - Arulnithi Demonte colony 2 first look out now | Galatta

தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து படத்திற்கு படம் ரசிகர்களை முழுமையான திரைப்பட அனுபவத்தை கொடுக்க கூடிய நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அருள்நிதி. தரமான திரைப்படங்கள் என்றாலே அருள்நிதி என்ற பிம்பத்தை இதுவரை தனது கடின உழைப்பினால் உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் அருள்நிதி. இவரது நடிப்பி கடந்த ஆண்டு ‘டி ப்ளாக்’, ‘தேஜாவு’  மற்றும்  ‘டைரி’ என மூன்று வித்தியாசமான திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தது. அதை தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் ‘திருவின் குரல்’ மற்றும் ‘கழுவெத்தி மூர்க்கன்’ போன்ற வித்யாசமான திரைக்கதை கொண்ட படங்களை கொடுத்தார் அருள்நிதி. இந்த ஆண்டு வெளியான இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’.

கடந்த 2015ல் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிரள வைக்கும் ஹாரர் கதைகளத்தில் வெளியான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிமான்டி காலனி திரைப்படம். முதல் படத்திலே தரமான திரில்லர் கதைகளத்தை நேர்த்தியாக கொடுத்து திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அஜய் ஞானமுத்து திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக டிமான்டி காலனி திரைப்படம் அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இமைக்கா நொடிகள், கோப்ரா என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை அஜய் ஞானமுத்து இயக்கி திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை ஏழு ஆண்டிகளுக்கு இயக்கி வருகிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.  இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகர் அருள்நிதி நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் படத்தில் அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

ஒயிட் லைட்ஸ் என்டர்டேயின்மன்ட் மற்றும் ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய டி குமரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். சென்னை, ஓசூர் மற்றும் ஆந்திர பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படபிடிப்புன்  தற்போது இறுதிக் கட்ட வேலை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் முதல் பார்வையை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. மிரட்டலான தோற்றத்தில் அருள்நிதி இருக்கும் மோஷன் போஸ்டர் ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத ஹாரர் திரைக்கதையில் உருவாகும் டிமான்டி காலனி 2 திரைப்படம் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“மாமன்னனை கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இது தான்.” வசீகரிக்கும் குரலில் வடிவேலு பாடும் வீடியோவை பகிர்ந்த மாரி செல்வராஜ்..
சினிமா

“மாமன்னனை கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இது தான்.” வசீகரிக்கும் குரலில் வடிவேலு பாடும் வீடியோவை பகிர்ந்த மாரி செல்வராஜ்..

 அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..
சினிமா

அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..
சினிமா

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..