“ஜெயிலர் படம் விக்ரம் மாதிரி இருக்கே…” விமர்சனங்களுக்கு விளக்கமளித்த நடிகர் வசந்த் ரவி.. – சுவாரஸ்யமான தகவல் இதோ..

ஜெயிலர் பட விமர்சனத்திற்கு பதிலளித்த வசந்த் ரவி வீடியோ உள்ளே - Vasanth ravi on rajinikanth Jailer comparison with kamal haasan vikram | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன் லால், ஜாக்கி ஷராப், விநாயகன், சிவராஜ் குமார், யோகி பாபு, கிஷோர், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று இணையத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவான ஜெயிலர் படத்தின் டிரைலர் (Show case) நேற்று வெளியானது. மிரட்டலான தோற்றத்தில் ரஜினிகாந்த் அசத்தும் ஜெயிலர் பட டிரைலர் ரசிகர்களிடையே வெகுவாக பகிரப்பட்டு தற்போது இணையத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.   

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர்கள் வசந்த் ரவி, மிர்னா ஆகியோர் கலந்து கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். இதில் ஜெயிலர் திரைப்படம் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த விக்ரம் படம் போல் உள்ளது என்ற விமர்சனம் குறித்து கேட்கையில்,

ஜெயிலர் பட நடிகை மிர்னா , அப்படி இருக்கலாம். இப்படி இருக்கலாம் னு  தோணும். ஆனா இது மொத்தமாவே வித்யாசமான கதைக்களம். எல்லா விதமான ரசிகர்களையும் திருப்தி படுத்த கூடிய விஷயம் இதுல இருக்கு.” என்றார் மிர்னா.

மேலும் தொடர்ந்து. நடிகர் வசந்த் ரவி இதுகுறித்து, ஒரு போட்டோ வெச்சு என்னவேனும்னாலும் சொல்லலாம்.. எல்லாமே ஒரு அனுமானம் தான.. படம் ரிலீஸ் ஆவுர வரை என்னவேனா கதை உருவாக்கலாம். ஆனா ஜெயிலர் மொத்தமாவே வித்யாசம்.. இந்த கதையில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். அதுகூட மத்த படங்களை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது. காரணம் படத்தின் திரைக்கதையும் அதிலிருக்கும் முடிச்சுகளை அவிழ்பது தான் படமாகவே இருக்கும். இந்த படத்தை பொறுத்தவரை எங்கேயும் ஒப்பிட்டு பார்க்க முடியாது. படம் பார்த்தா புரியும். அதுவரை இதுபோன்ற விஷயங்கள் வந்துட்டு தான் இருக்கும். என்றார் வசந்த் ரவி.

மேலும் தொடர்ந்து நடிகர்கள் வசந்த் ரவி, மிர்னா ஆகியோர் ஜெயிலர் படம் குறித்து பேசும் முழு வீடியோ உள்ளே..

 அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..
சினிமா

அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..
சினிமா

அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..

 நான்கு தேசிய விருதுகளை வென்ற திரைப்பிரபலம் தற்கொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.! -  விவரம் உள்ளே..
சினிமா

நான்கு தேசிய விருதுகளை வென்ற திரைப்பிரபலம் தற்கொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.! - விவரம் உள்ளே..