தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நகுல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்  வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்து வெளிவந்த காதலில் விழுந்தேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக நகுல் நடித்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தில் இடம்பெற்ற நாக்க முக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி சூப்பர்ஹிட்டானது. 

கடைசியாக நடிகர் நகுல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் செய் இதனை அடுத்து எரியும் கண்ணாடி மற்றும் வாஸ்கோடகாமா உள்ளிட்ட திரைப்படங்கள்  தயாராகி வருகின்றன .மேலும்  விஜய் தொலைகாட்சியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் நடிகர் நகுலின் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பிறந்த குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. அதில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக உலகளவில் பல பிரபலங்களும் பிரத்தியேக புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது நடிகர் நகுல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியாத பிரத்தியேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரென்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ...