கடந்த 2011-ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் முரளி ஷர்மா. அதைத்தொடர்ந்து ஆரம்பம், பாயும்புலி , அஞ்சான், தேவி போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.  

Actor Murli Sharmas Mother Passed Away

சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான அலவைக்குந்தபுரமுலோ திரைப்படம் இவரின் நடிப்பை உலகிற்கு எடுத்துரைத்தது. வால்மிகி எனும் பாத்திரத்தில் பட்டையை கிளப்பியிருந்தார் முரளி ஷர்மா. 

Actor Murli Sharmas Mother Passed Away

இந்நிலையில் முரளியின் தாயார் பத்மா ஷர்மா நேற்று அவரது வீட்டில் இருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் பலரும் முரளி ஷர்மாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முரளி ஷர்மாவின் ரசிகர்களையும் இச்செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.