நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. ஐதராபாத், சென்னை என இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் மாறி, மாறி நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஒட்டு மொத்தமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

Valimai Team Not Planning To Shoot After Lockdown

லாக்டவுன் முடிந்தவுடன் இப்படத்தின் ஆக்ஷன் நிறைந்த சேஸிங் காட்சிகளை எடுக்கவுள்ளதாக செய்திகள் இணையத்தில் கிளம்பின. இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்கையில், அதுபோன்ற செய்திகள் ஏதும் இல்லை. இணையத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெளிவு படுத்தினர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறினர். 

Valimai Team Not Planning To Shoot After Lockdown

கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து நாட்டில் உள்ள அனைவரும் மீண்ட பிறகே, இயல்பு நிலை திரும்பியவுடன் படப்பிடிப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.