பளு தூக்கும் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக கலந்து கொண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கணை என்ற பெருமைக்குரியவர் கர்ணம் மல்லேஸ்வரி. தற்போது இவரது வாழ்க்கை வரலாறு  தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் பையோபிக் திரைப்படமாக உருவாகவிருக்கிறது.

Kona Venkat About Sanjana Reddys Health

சஞ்சனா ரெட்டி இயக்கவிருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கொனா வெங்கட் தயாரிக்கிறார். இந்நிலையில் இயக்குனர் சஞ்சனா ரெட்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்வேறு விதமாக செய்திகள் வெளியானது. 

Kona Venkat About Sanjana Reddys Health Kona Venkat About Sanjana Reddys Health

இதனையடுத்து தயாரிப்பாளர் கொனா வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில், கர்ணம் மல்லேஸ்வரி பட இயக்குனர் சஞ்சனா ரெட்டி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். சில தினங்களில் முற்றிலும் குணமாகி வீடு திரும்புவார். வைரல் காய்ச்சல் காரணமாக தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அச்செய்திகளை தவிர்த்திடுங்கள் என்று எடுத்துரைத்தார். தற்போது அனுஷ்கா நடித்த சைலன்ஸ் படத்தை தயாரித்துள்ளார் கொனா வெங்கட்.