இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து திரையரங்குகளில் உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கனா.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்தாலும் பெண்கள் கிரிக்கெட்டை மைய்யப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

தற்போது இது குறித்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இப்படம் அழகாக எழுதப்பட்டு, சரியாக வெளிவந்ததெனவும் பதிவிட்டுள்ளார்.