தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சிவ சிவா. மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் ஆகாங்ஷா சிங் கதாநாயகிளாக நடித்திருக்கும் சிவசிவா திரைப்படத்தில் காளி வெங்கட் ,பாலசரவணன் ,ஹரிஷ் உத்தமன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

LENDI ஸ்டுடியோ சார்பில்  தயாரிப்பாளர் எஸ்.ஐஸ்வர்யா தயாரிப்பில், தனது 30வது திரைப்படமாக தயாராகும் சிவசிவா திரைப்படத்தில் இசையமைப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் ஜெய்.
R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய காசிவிசுவநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். 

முன்னதாக வெளிவந்த சிவசிவா படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் சிவசிவா திரைப்படத்தின் அடுத்த பாடலாக "அம்மம்மா" என்ற புதிய பாடல் தற்போது வெளியானது. நடிகர் ஜெய்யின் இசையில் பாடலாசிரியர் யுகபாரதி அருமையான வரிகளில் வெளிவந்துள்ள அழகான அம்மம்மா பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.