“வட கொரியாவில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால், வரும் 2025 ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக உணவு சாப்பிட வேண்டும்” என்று, அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட கொரியா நாட்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அந்நாட்டில் பயிர்கள் யாவும் முற்றிலுமாக சேதம் அடைந்து உள்ளது. 

இதனால், அந்நாட்டில் உணவு பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு, உணவுப் பொருட்கள் விலையும் பன்மடங்கு அளவுக்கு ஒரே அடியாக உயர்ந்து உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக, வட கொரியாவில் தற்போது உணவுப் பஞ்சமும் அதிகரித்து தலைவிரித்தாடி வருகிறது. 

அத்துடன், அந்நாட்டில் கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்குச் சீல் வைத்து உள்ளது. 

மேலும், உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சார்ந்திருந்த சீன எல்லையையும் அந்நாட்டு அரசாங்கம் மூடி வைத்து உள்ளது. 

இதன் காரணமாக, அந்நாட்டில் ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர் மற்றும் 32 யூரோ மதிப்பில் விற்கப்பட்டு வருகிறது. 

அதாவது இதன் விலைகள் இந்திய ரூபாய் மதிப்பில் 3,300 ரூபாய் ஆகும். இதன் காரணமாகவே, வட கொரிய மக்கள் மிக பெரிய அளவில் மிகவும் கொடுமையான அளவுக்கு கடுமையான உணவுப் பஞ்சத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், “வரும் 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் அனைவரும் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று, அந்நாட்டு அதிபர் அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த உத்தரவுக்கு உலக நாடுகள் யாவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. 

இது தொடர்பாக வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிக்கும் மக்கள் பேசும் போது, “வரும் 2025 ஆம் ஆண்டு வரை, மக்களைக் குறைவாக உணவு உண்ண வேண்டும் என்று அரசு சொல்வது எப்படி எந்த வகையில் சாத்தியமாகும்?” என்றும், அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், “இங்கு, இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமான அளவில் இருப்பதால், தினமும் உணவு பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வருவதாகவும், எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை” என்றும், அந்நாட்டு மக்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

இந்நாட்டில் நிலவி வரும் இப்படியான உணவு பஞ்சாயத்தால், ஏழை மற்றும் எளிய மக்கள் பசிக்கொடுமையால் கொத்து கொத்தாக மடியும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, “உணவுப் பொருட்கள் சப்ளை குறுகியதாலும், விவசாய துறை தானிய உற்பத்தி திட்டத்தைப் பூர்த்தி செய்யாத காரணத்தாலும், இந்த உணவு பஞ்சம் ஏற்பட்டதாக” நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.