பிரபலமான மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் வீராங்கனையாக வலம் வந்த ரித்திகா சிங் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கில் இறுதிசுற்று படத்தின் ரீமேக்காக தயாரான குரு படத்திலும் நடித்த ரித்திகா சிங் அடுத்தடுத்து சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். இதனையடுத்து பாக்சர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, கொலை ஆகிய திரைப்படங்களிலும் ரித்திகா சிங் தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகை ரித்திகா சிங்கின் நடிப்பில் தயாராகியுள்ள புதிய மியூசிக் வீடியோ "டேய்". பிரபல இசையமைப்பாளர் இன்பராஜ் ராஜேந்திரன் இசை அமைத்து எழுதியுள்ள டேய் பாடலை பாடகி அனுகிரகா ரபி பாடியுள்ளார். பிரபல நடன இயக்குனரான சதீஷ் கிருஷ்ணன் பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார்.

Hue Box Studios, ஹம்சினி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க திங்க் ஸ்பெஷல்ஸ் வெளியிட்ட டேய் மியூசிக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ரித்திகா சிங்கின் துள்ளலான நடனத்தில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மியூசிக் வீடியோ இதோ…