தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. நடிகர் சிலம்பரசன்T.R கதாநாயகனாக நடித்திருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தற்போது தொடர்ந்து பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் கடைசியாக ஜீவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்து வெளிவந்த செல்ஃபி திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இதனையடுத்து தற்போது மீண்டும் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. முன்னதாக ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் இடிமுழக்கம் மற்றும் ரெபெல் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் மெட்ராஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கின்றனர். இயக்குனர் K.விவேக் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.