2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா. 

Ace Producer Amma Creations T Siva Shares His Opinion About Ghilli Movie Sequel

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா.

Ace Producer Amma Creations T Siva Shares His Opinion About Ghilli Movie Sequel

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது சிவப்பு கம்பள வரவேற்பில் பேசிய தயாரிப்பாளர், அம்மா கிரியேஷன்ஸ் T சிவாவிடம் எந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்வி கேட்டபோது, தளபதி விஜய் நடித்த கில்லி படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான இந்த படம் தளபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகும். கில்லி படத்திற்கு என ரசிகர் பட்டாளமே உண்டு. சொல்லி அடித்த கில்லி படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு உள்ளதோ இல்லையோ, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.