இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என நேற்று அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Ace Lyricist And Actor Pa Vijay Reveals He Is Writing Lyrics For Thala 59 Nerkonda Paarvai

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்திவருகிறது.

Ace Lyricist And Actor Pa Vijay Reveals He Is Writing Lyrics For Thala 59 Nerkonda Paarvai

தற்போது பாடலாசிரியர் பா. விஜய் என் நண்பர் அஜித் படத்துக்கு பாடல் எழுதுகிறேன் என்று விழா ஒன்றில் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே பில்லா, ENGLISH VINGLISH போன்ற படங்களுக்கு விஜய் எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.