உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நட்சத்திறங்கள் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் சமூக ஊடகங்களில் ட்வீட் மற்றும் ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை நயன்தாராவிற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன் சர்ப்ரைஸ் தரும் வகையில், விதவிதமான பூக்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் அதனுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே" என குறிப்பிட்டுள்ளார். க்யூட் காதலர்களாக இருக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது கலாட்டா.